தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் தங்கமணி தொகுதியில் திட்டப்பணிகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு - அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதி திட்டப்பணிகள்

சென்னை: ஊரகப் பகுதி முன்னுரிமை திட்ட நிதியத்தின் கீழ், அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

High court refuse to stop thangamani constituency works
High court refuse to stop thangamani constituency works

By

Published : Feb 18, 2021, 8:01 PM IST

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக 1, 053 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, 2020-21ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மூன்றில் இரண்டு பகுதியான 702 கோடி ரூபாய், ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்திலிருந்து அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதிக்கு உள்கட்டமைப்பு பணிகளுக்காக மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (பிப். 18) விசாரணைக்கு வந்தபோது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டபேரவை தொகுதிகளில் அமைச்சர் தங்கமணியின் தொகுதி உள்பட மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் தொகுதியை வளப்படுத்தும் நோக்கத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளையும் சமமாக பாவிக்க வேண்டும் எனவும், தேர்தல் நெருங்குவதால் இப்பணிகளுக்கான டெண்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளும் சமமாக பாவிக்கப்பட்டதாகவும் தற்போது குமாரபாளையம் தொகுதியில் 237 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, 25 விழுக்காடு பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த 2016-17 முதல் 2019-20 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஆறு தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட சம அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்த விவரங்களையும் தாக்கல் செய்தார். நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அரசுத்தரப்பின் வாதத்தை ஏற்று, வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், குமாரபாளையம் தொகுதியில் 237 திட்டப்பணிகள் தொடங்கிவிட்டதால், அவற்றை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்தனர். இப்பணிகளுக்கான டெண்டர் கோரியது, பணிகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்களை தேதி வாரியாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்க, அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சக்ரா படத்தின் இடைக்கால தடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details