'கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்க' - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - madras high court ordered-that-all-temporary-employees-of-co-operative-societies-across-tn-should-be-made-permanent
11:07 February 19
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து இன்று (பிப்.19) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, "கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசுப் பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவு, வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், வழக்கு தொடராத தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் உத்தரவிட்டார். மேலும், இதனை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.