அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சண்முகம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
'தனிநபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது' - சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தனிநபர் அளிக்கும் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தினர். அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்து தனி நபர்கள் அளிக்கும் புகார்களை, பொது நல வழக்காக கருத முடியாது. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும், அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். இவ்வழக்கை பொறுத்தவரை, சட்டவிதிகளை பின்பற்றி மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நபர் புகார்கள் தொடர்பான வழக்குகளை பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கூடாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்