இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
chennai
”வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வேலூர், திருவண்ணாமலை உட்பட பதினைந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மதுரை, தேனி உட்பட ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
TAGGED:
சென்னை வானிலை ஆய்வு மையம்