தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு’ - வானிலை மையம் தகவல் - சென்னையில் மழை

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

By

Published : May 19, 2021, 3:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வருகிற மே 21ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதேபோல, மே 22, 23ஆம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

உதகமண்டலம் (நீலகிரி) 4 செ.மீ., கிருஷ்ணராயபுரம் (கரூர்) 3 செ.மீ., பேரையூர் (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), கலட்டி (நீலகிரி) பகுதிகளில் 2 செ.மீ., குழித்துறை (கன்னியாகுமாரி), அவலாஞ்சி (நீலகிரி), மாயனுர் (கரூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), புலிவலம் (திருச்சிராப்பள்ளி) பகுதிகளில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மே.22, 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு

தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) மே 19ஆம் தேதி இரவு 11.30 வரை கடல் அலை 2.0 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
மத்தியக் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் மே 23ஆம் தேதியன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details