சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சின்னமானது, தற்போது காற்றழத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்து நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடைக்க வாய்ப்புள்ளதாக சென்னை தென் மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.1) காலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3.12.2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன் பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும் என அறிவித்த நிலையில், தற்போது, புயலானது திசை மாறி நெல்லூர்- மச்சிலிப்பட்டினத்திற்கும் இடைய சுமார் 90 கி.மீ வேகத்தில் புயலாக கரையக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு பகுதியில், தற்போது 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது கடந்த 6 மணிநேரமாக காற்றழ்த்ததாழ்வு மண்டலமாக இருந்து வருகிறது. மேலும் இது தற்போது நிலைக்கொண்டிருக்கும் பகுதியானது மேற்கு வங்ககடல் பகுதியயில் அட்சரேகை 9.5°N மற்றும் தீர்க்கரேகை 86.0°E, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 730 கி.மீ., 740 கி.மீ. சென்னைக்கு தென்கிழக்கே, நெல்லூருக்கு தென்கிழக்கே 860 கி.மீ., 930 கி.மீ பாபட்லாவின் தென்கிழக்கே மற்றும் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 910 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து வருகிறது. இது மச்சிலிப்பட்டினத்தில், சுமார் 80-90 கி.மீ வீசக்கூடும் அவ்வெப்போது 100 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.