தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி, பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று(ஜூலை 9) இரவு தொடங்கி காலை வரை கன மழை பெய்தது. குறிப்பாக தென்சென்னை, புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் பலத்த மழை - சென்னையில் கனமழை
சென்னை: பல்வேறு பகுதிகளில் இரவு தொடங்கி அதிகாலை வரை கன மழை பெய்தது.
கனமழை
கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகியப் பகுதிகளில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக ஆலந்தூர் பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது சென்னையில் வெயில் தணிந்து மேக மூட்டத்துடன் காணப்படுவதால், சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.