வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 (நவ-15) மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அநேக இடங்களில் லேசான முதல் மிதமான பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி,விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம். - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் திங்கள் அன்று (நவ-16) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) கேளம்பாக்கம் (செங்கல்பட்டு ) 9, இந்துஸ்தான் பல்கலை (செங்கல்பட்டு) 7, சேத்தியாத்தோப்பு (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), செங்கல்பட்டு தலா 5, நன்னிலம் (திருவாரூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 4, வந்தவாசி (திருவண்ணாமலை), சீர்காழி (நாகப்பட்டினம்), ராமேஸ்வரம், சென்னை நுங்கம்பாக்கம் , மஞ்சளாறு (தஞ்சாவூர்) , செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) தலா 3 செ.மீ மழைப் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.