தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக முன்னிலை வகித்துவருவதையடுத்து, முக்கிய அரசு அலுவலர்கள் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
ஸ்டாலினை நேரில் சந்தித்த அரசின் முக்கிய அலுவலர்கள் - திமுக தலைவர்
தமிழ்நாட்டில் அடுத்ததாக ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலர், தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், டிஜிபி உள்பட பல அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மு.க ஸ்டாலின்
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.