டெல்லியில் நடைபெற்ற 10ஆவது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முதலிடம் பெற்றமைக்கான விருதினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விருதினைப் பெற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தொடர்ந்து 5ஆவது முறையாக இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து விருது பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செய்யக்கூடிய மருத்துவமனை சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை என்ற அடிப்படையில் கூடுதலாக இன்னொரு விருதும் பெற்றுள்ளோம்.
அதை தொடர்ந்து இந்தியாவிலே குறிப்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைளை இழந்த நாராயணசாமிக்கு மாற்று கைகளைச் சேர்த்ததற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறப்பு விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் இருக்கிறது.