தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டெல்லி பயணத்தின்போது கூடுதல் தடுப்பூசிகளை வழங்க முதலமைச்சர் கோரிக்கைவைப்பார்' - ma subramanian press meet

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தின்போது நிச்சயம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரிக்கைவைப்பார் என சுகாதாரத் துறை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ma subramanian
மா‌.சுப்ரமணியன்

By

Published : Jun 12, 2021, 1:14 PM IST

கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இணைந்து ஆய்வுசெய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா‌. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டிற்கு இதுவரை 1.6 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன, அதில் 98 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. கூடுதலாக இன்று காலை 1.26 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும், மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வரவுள்ளன.

1 கோடி தடுப்பூசிகள் போட இலக்கு

நேற்று (ஜூன் 11) வரை தமிழ்நாட்டில் 98 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஒரு கோடி தடுப்பூசிகள் போட இலக்குவைத்துள்ளோம்.

தடுப்பூசியால் 21,63,213 பேர் பயன்

சென்னை மாநகராட்சியில் மட்டும் தடுப்பூசியால் 21,63,213 பேர் பயன் அடைந்துள்ளனர், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வரையில் 9,655 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இடமாகக் கோயம்பேடு மாறும்.

முதலமைச்சரின் டெல்லி பயணித்தின்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைப்பார். தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது, அதைக் கருத்தில்கொண்டே மாநில வருவாய்த் துறை மதுபான கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளது" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னையில் 10-25 பேர் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 21 ஆக குறைந்துள்ளது, 6-10 பேர் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதி 24 ஆக குறைந்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

பொதுமக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொண்டு கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வேண்டும்" என்றார்.

5 மண்டலங்களில் 33,618 தெருக்களில் தொற்று பாதிப்புகள் ஏதும் இல்லை

இதையடுத்து பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், "கோயம்பேடு வணிக வளாகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இதுவரை 3646 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 33,618 தெருக்களில் தொற்று பாதிப்புகள் ஏதும் இல்லை. மத்திய அரசு அறிவித்தபடியே ஐந்து விழுக்காடு குறைவாகவே தொற்று உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9ஆவது பாடமாக தமிழ் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details