சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவின் திருமணம் குறித்து அவதூறாகப் பேசி, காணொலியைப் பரப்பியதாக சூர்யா தேவியை காவல் துறையினர் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு, சூர்யா தேவி உள்பட அவரைக் கைது செய்த காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சூர்யா தேவிக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 26) வெளியான கரோனா பரிசோதனையின் முடிவில், சூர்யா தேவி மற்றும் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் சாலிகிராமத்தில் உள்ள சூர்யா தேவியின் வீட்டிற்குச் சென்று, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.