சென்னை:தி.நகர் பர்கிட் சாலையில் ஹெச்டிஎஃப்சி வங்கிக் கிளை இயங்கிவருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ள 100 பேர் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
100 பேருக்கும் வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணப் பரிமாற்றம் நடைபெற்ற 100 வங்கிக் கணக்குகளையும் முடக்கம் செய்த வங்கி அதிகாரிகள் தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இது குறித்து மத்திய குற்றப்பிரிவுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை. வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்திய குற்றப்பிரிவு மற்றும் வங்கி மோசடி பிரிவுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கியின் இணையதள சேவையை ஹேக் செய்து இது போன்ற பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரே நேரத்தில் 100 பேருக்கு இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதனால் நூறு பேரின் வங்கிக் கணக்குகளையும் தற்காலிகமாக முடக்கம் செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை ஹெச்டிஎஃப்சி வங்கி கிளையின் சார்பாக எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:தக்காளியை தள்ளிக்கொண்ட போன திருடன் கைது - இதுக்கு முன்னாடி ஆப்பிள்