கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது மோசமான வலைதளங்களால் அவர்களின் கவனம் சிதறுகிறது. அந்த வலைதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
‘ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா?’ - ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை
சென்னை: ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளது. டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது.
முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்திக்கின்றனர். இதில் பல இடையூறுகள் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோசமான இணையதளங்களை மாணவ, மாணவியர் பார்ப்பதை தடுக்கும் வகையில் சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? ஏதாவது திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
மாநில அரசு பிரத்யேக கல்வி சேனல் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.
கரோனா காரணமாக அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளது. தற்போது எந்த இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா? என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.