தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மூலம் நிரப்ப வகை செய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த யேசுமணி என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது மறைமுக தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசின் இந்த நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.