தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை ஏற்படுத்தும் மருந்துகள் விற்பனை: அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு - மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை

சென்னை: மருந்துச்சீட்டு இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மருந்துகளை விற்கும் மருந்துக்கடைகள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதை ஏற்படுத்தும் மருந்துகள் விற்பனை தொடர்பாக அறிக்கை தாக்கல் சமர்பிக்க உத்தரவு

By

Published : Oct 2, 2020, 12:14 AM IST

வலி நிவாரணம் மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலம் குழந்தைகளுக்குச் செலுத்திய நபரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர். இந்தக் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு, பள்ளி மாணவ - மாணவிகளை போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்கும் வகையில், மருந்துச்சீட்டு இல்லாமல், வலி நிவாரண மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்தது.

மேலும், போதை தரும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மருந்துக்கடைகள் மீது எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, சம்பந்தப்பட்ட மருந்துக்கடைகளின் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளனவா, இதுவரை எத்தனை உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன, இதுபோல் போதைக்கு அடிமையான மாணவர்கள் எத்தனை விழுக்காட்டினர் உள்ளனர்?

உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, இது குறித்து அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கோவி ஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details