தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - டிராஃபிக் ராமசாமி

சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறியதாக டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.சி.டி.வி காட்சிகளை சமர்ப்பிக்க மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

By

Published : Feb 1, 2019, 3:21 PM IST

சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலையில் இருந்த சாலையோர கடைகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு, உயர்நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி அமல்படுத்தாததால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராஃபிக் ராமசாமி தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை:

டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், நீதிமன்ற உத்தரவின் படி தினமும் இந்த சாலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் சாலையோரம் கடைகள் அமைக்கும் நபர்களின் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் தெரிவத்தார்.

மேலும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு வரும் 15-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதில் வியாபாரிகளின் கருத்துக்கள் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு இந்த வழக்கை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்றைய தினம் சுழற்சி முறையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பதிவான சி.சி.டி.வி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. கூடுதலா, மனுதாரர் தரப்பிலும் இதேபோல் வீடியோ ஆதாரங்களை சமர்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details