தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடும்ப பிரச்னையில் கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்' - உயர்நீதிமன்றம் அறிவுறை - arrest

குடும்ப பிரச்னைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என காவல்து றையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றம்

By

Published : Feb 7, 2019, 6:57 PM IST

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்ஜாமீன் மனுக்கள் அதிகரிப்பதை தடுக்க, குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 (ஏ) பிரிவின் படி, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். இதுகுறித்து ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதையும், அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக காவல்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் உள்ளிட்ட சிறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details