சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மண்ணடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தம்பு செட்டித் தெருவில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் காவல்துறையின்ர் சோதனையிட்ட போது, கேரள மாநிலத்தை சேர்ந்த இலியாசர் தங்கியிருந்த அறையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது.
தனியார் விடுதியில் இருந்து 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் - chennai
சென்னை: சுதந்திர தின பாதுகாப்பு கருதி தனியார் விடுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹவாலா பணம் பறிமுதல்
அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வருமானவரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இலியாசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.