தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா 4 ஆம் அலை தொடங்கிவிட்டதா? கரோனா தரவு வல்லுநர் (covid data analyst) விஜய் ஆனந்த் பதில் - சென்னை

தமிழ்நாட்டில் கரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அலை தொடங்கி விட்டதா என்பது தொடர்பாக கரோனா தரவு வல்லுநர் விஜய் ஆனந்த் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதனை விரிவாக பார்க்கலாம்.

கரோனா 4 ஆம் அலை தொடங்கிவிட்டதா? கரோனா தரவு வல்லுநர் பதில்
கரோனா 4 ஆம் அலை தொடங்கிவிட்டதா? கரோனா தரவு வல்லுநர் பதில்

By

Published : Jun 28, 2022, 6:32 AM IST

Updated : Jun 28, 2022, 7:56 AM IST

சென்னை:கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கரோனா தரவு வல்லுநர் (covid data analyst) விஜய் ஆனந்த் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

1. தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எந்தெந்த மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருகிறது?

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கவில்லை. சென்னை செங்கல்பட்டில் மட்டுமே சற்று அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் சற்று குறைவாகவே உள்ளது. ஜனவரி மாதம் பரவியது போல் தற்போது பரவல் இல்லை. இரட்டிப்பு( Doubling rate) தன்மை என்பது சற்று குறைவாக உள்ளது. இதனால் பெரிதும் அச்சப்படத் தேவையில்லை.

கரோனா 4 ஆம் அலை தொடங்கிவிட்டதா? கரோனா தரவு வல்லுநர் பதில்

2. கரோனா பரவல் இரட்டிப்பு தன்மை தமிழ்நாட்டில் எவ்வாறு உள்ளது?

சென்ற கரோனா அலையின் போது பரவிய இரட்டிப்பு தன்மையை விட தற்போது குறைவாக தான் உள்ளது. எனவே புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால் அச்சப்படத் தேவையில்லை.

3. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பரவல் எவ்வாறு உள்ளது?

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த மாதம் ஒமைக்ரான் பிஏ 4 மற்றும் பிஏ5 ஆகிய வைரஸ் பரவியது ஆனால் அது வீரியம் சற்றென்று குறைந்துவிட்டது பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. தற்போது இந்தியாவிலும் அந்த வகை வைரஸ் தான் பரவ தொடங்கியுள்ளது. எனவே பரவல் சற்றே இருக்கும். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர் இதனால் பாதிப்பு தவிர்க்கப்படும்.

4. கரோனா தொற்றின் புதிய அலை தொடங்கி விட்டது என்று எவ்வாறு கருத முடியும்?

தொற்றின் இரட்டிப்பு தன்மை, பரவல் விகிதம் முதலியவற்றை வைத்து அலை தொடங்கிவிட்டது என்று கருதலாம். இரண்டு மூன்று நாட்களில் தொற்ற பெருமளவில் அதிகரிக்கும். மருத்துவமனைகளில் இரண்டு மூன்று நாட்களில் படுக்கை நிரப்பிவிடும், இதையெல்லாம் வைத்து தொடங்கிவிட்டது என கருதலாம்.

5. அடுத்து அலை தொடங்கிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஜனவரி மாதம்தான் ஒரு பெரிய அலை முடிந்தது. எனவே உடனடியாக வருவது சற்று கடினம். அப்படி வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. 10 நாட்களுக்குள் அடுத்த அலை தொடங்கி விட்டதா என்று தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை தாக்கல் - விரைவில் அவசரச் சட்டம் ?

Last Updated : Jun 28, 2022, 7:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details