தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்தது 2024 புத்தாண்டு.. வர்ண ஜாலங்களுடன் வரவேற்ற பொதுமக்கள்! - புத்தாண்டு கொண்டாட்டம்

Happy New Year: 2023ஆம் ஆண்டு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. பல்வேறு இடங்களில் மக்கள் கேக் வெட்டி 2024ஆம் ஆண்டு புத்தாண்டை இனிப்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர்.

Happy New Year
பிறந்தது 2024 புத்தாண்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 12:06 AM IST

சென்னை: புத்தாண்டு என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம் எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவடைந்து, 2024ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், 2024 புத்தாண்டு பிறந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை தொடங்கி, இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல இடங்களில் குவிந்த பொதுமக்கள் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்தும், வண்ண, வண்ண வான வேடிக்கைகளை வெடித்தும், புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றும் வழிபாட்டில் ஈடுபட்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், கடை வீதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்தல் ஆகிய பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

2023இல் சந்தித்த பல இருள், சோதனை, கஷ்டம், இழப்பு அனைத்தும் நீங்கி, 2024ஆம் ஆண்டு, நல்லதொரு மாற்றத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையோடும் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், புத்துணர்வுடன் புதிய பயணத்தை துவங்க ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இதையும் படிங்க:ஹாங்காங்கில் பிறந்தது 2024 புத்தாண்டு.. வண்ணங்கள் மிளிர கோலாகல கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details