தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயாநிதி மாறனை சாத்தான் என்று குறிப்பிட்ட ஹெச். ராஜா! - தயாநிதிமாறன்

சென்னை: மக்களவையில் எம்.பி. தயாநிதிமாறன் பேசியதை சாத்தான் வேதம் ஓதுகிறது என்று குறிப்பிட்டு பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா டிவீட் செய்துள்ளார்.

H-raja

By

Published : Jun 27, 2019, 1:47 PM IST

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசினார். அப்போது மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்தான் பாஜக வெற்றி பெற்றது என்றும், திமுக வலிமையான கூட்டணி அமைத்ததால் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக அரசை ஊழல்மிகுந்த அரசு என்று சாடியிருந்தார்.

இதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் "ஊழலின் ஊற்றுக்கண் ஊழலுக்கு எதிராக அனல் தெறிக்கும் பேச்சாம். சாத்தான் வேதம் ஓதுகிறது. இரண்டரை ஆண்டுகள் பொய்களைப் பரப்பி வெற்றி கண்ட கூட்டமல்லவா. ருசி கண்ட பூனை, 5 வருடங்களுக்கு இன்னமும் என்னென்ன கேலிக்கூத்துகள் அரங்கேறுமோ" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details