தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரகசிய போன்கால்...வளைக்கப்பட்ட போதை சப்ளையர்கள்... 1620 கி.கி குட்காவை பறிமுதல் செய்த காவல்துறை! - போலீசாரின் அதிரடி சோதனையால் சிக்கிய 1620 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: குட்கா, ஹன்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பதாக அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினரின் தீவிர சோதனையில் 1620 கிலோகிராம் குட்கா, ரூ. 79 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைபொருள் பறிமுதல்

By

Published : Sep 6, 2019, 5:06 PM IST

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் குட்கா, ஹன்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கோட்டூர்புரம், உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் உதவி ஆய்வாளர் இளையராஜா தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காவல் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் விற்றுவந்தவர்களை பிடிக்க இன்று அதிகாலை மறைமுகமாக காத்திருந்தனர். அவ்வழியே வந்த இரண்டு வேன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அதில் கொண்டுவரப்பட்ட 1620 கிலோ கிராம் குட்கா, ரூ. 79 ஆயிரம் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேலும், வாகனத்தை ஓட்டிவந்த ராமநாதன், மதன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் குட்கா பொருட்கள் அனைத்தும் குன்றத்தூர் கரைமா நகரிலுள்ள குடோனில் பதுக்கி வைத்து சப்ளை செய்து வருவது தெரிய வந்தது.

காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா,போதைப்பொருள்.

மேலும், குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் பெங்களூரிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு, இங்கு சில்லறை வியாபாரத்திற்காக விற்பது தெரிய வந்தது. இதையடுத்து போதை தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details