சென்னை: வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசாவிற்கு இடைய கலிங்கப்பட்டினத்தில் நாளை(செப்.26) மாலை கரையை கடக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
அதி தீவிர புயலாக மாறும் குலாப் வங்கக்கடலில் நேற்று(செப்.24) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வந்தது. தற்போது, இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.
தற்போது, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள நிலையில், இது தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, மேற்கு திசை நோக்கி நகர்ந்து கலிங்கப்பட்டினம் அருகே நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த 'குலாப்' எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தடுப்பூசி சிறப்பு முகாம் - 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு