அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணம் செய்யும் மகளிரிடம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
- பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.
- ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்திப் பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.
- நடத்துநர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளைப் பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.
- வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
- பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது.