சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆணையர் ரவீந்திரநாத் இன்று 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஜிஎஸ்டி கட்டாமல் இருந்தால் இனி அதிரடி தான் - ரவீந்திரநாத்
சென்னை: ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் வணிக நிறுவனங்கள் மாதம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் (ஜிஎஸ்டி) ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் ரவீந்திரநாத், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் வணிக நிறுவனங்கள் மாதம் ஒரு முறையும், ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக வருவாய் ஈட்டும் சிறு, குறு நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இத்திட்டம் அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்து வரும் வணிகர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தாக்கல் செய்துவிட வேண்டும். ஜிஎஸ்டி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனத்தின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.