தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல் - சென்னை விமான நிலையம்

சென்னை: குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரூப்-4 தேர்வு முறைகேடு பிரத்யேக பேனா உபயோகிப்பு-சிபிசிஐடி
குரூப்-4 தேர்வு முறைகேடு பிரத்யேக பேனா உபயோகிப்பு-சிபிசிஐடி

By

Published : Jan 31, 2020, 10:02 AM IST

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொண்டு, முகப்பேரில் உள்ள ஜெயகுமார் இல்லத்திற்குச் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்ட்டிருந்த நிலையில், கதவினை உடைத்து வீட்டின் உள்ளே சென்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 73 ஆயிரத்து 800 ரூபாய் பணம், 45 சவரன் தங்க நகை, லேப் டாப், பென் ட்ரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக பேனாவையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜெயகுமார் வீட்டில் ரெய்டு


இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், ஜெயகுமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு தாயானார் 90ஸ் ஹீரோயின்

ABOUT THE AUTHOR

...view details