தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்கெழுத்து, தட்டச்சர் பணிக்கு பிப்.13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சுருக்கெழுத்து, தட்டச்சர் பணிக்கு வரும் பிப்.13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

1

By

Published : Feb 4, 2019, 8:24 PM IST

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

ஒருங்கிணைந்த குடிமைப்பணி பதவிகளுக்கான குருப் 4 தேர்வு கடந்த 11.2.2018 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் 30.7.2018 அன்று வெளியிடப்பட்டது. இதில் சுருக்கெழுத்து, தட்டச்சர் நிலை- 3 றிற்கு காலியாக உள்ள 900 பணியிடத்திற்கு தகுதிப்பெற்ற 1200 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

1

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வரும் 13 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் பதவிக்கு தேர்ச்சி பெற்று விட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளத்தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details