சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடுத்த மனு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று(பிப்.02) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில், 'பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பேனா நினைவுச்சின்னத்திற்காக CRZ விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். மெரினாவிலும், கொட்டிவாக்கம் - கோவளம் கடற்கரையிலும் அரசியல் தலைவர்கள் யாருக்கும் சமாதி அமைக்கவோ? சிலைகள் வைக்கவோ? நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 31-ம் தேதி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.