சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 44ஆவது செயலாண்மைக் குழு கூட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட இடம் தேர்வு, அரசு நிர்வாக அனுமதி, நிதித் தேவை மற்றும் ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகள், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், ’விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிடவும், தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் அனைத்து விளையாட்டுகளிலும் சாதனை படைத்திடவும், இளைய சமுதாயத்தினரின் கவனத்தை விளையாட்டின் பால் ஈர்க்கும் வண்ணம் பன்னாட்டு அளவிளான போட்டிகளை நடத்திட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.