தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறந்த எழுத்தாளர் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை! - Govt to raise prize money to 1 lakh

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத்தொகை 2022-23ஆம் நிதியாண்டு முதல் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறந்த எழுத்தாளர் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறந்த எழுத்தாளர் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை

By

Published : Jun 30, 2022, 7:54 PM IST

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச்சங்கத்தின் (TAMIL NADU ADI DRAVIDAR & TRIBAL AND LITERATURE SOCIETY) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகிய படைப்புகளுக்கான பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதி திராவிடர்,பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வு செய்து, அப்படைப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறந்த எழுத்தாளர் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை

தற்பொழுது மேற்காணும் பரிசுத் தொகையானது 2022-23ஆம் நிதியாண்டு முதல் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்பு மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details