கரோனா வைரஸ் தொடர்பாக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அறிந்து கொள்ளுங்கள் என்ற பெயரில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் அடங்கிய தகவல் அனுப்பப்பட்டுள்ளன. அதில், கரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன, பரிசோதனை முறை மற்றும் மையங்கள், மருத்துவமனையின் விவரங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரித்தல், தினமும் கண்காணிக்கப்பட வேண்டியவை என்ன, கட்டணமில்லா தொலைபேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் படங்களுடன் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: ஆட்சியர்களுக்கு உத்தரவு - corona awareness
சென்னை: கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களைத் தயார் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா
இது பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனை அந்தந்த மாவட்டத்திற்கு தேவையான எண்ணிக்கையில் அச்சடித்து, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள மக்கள்தொகை அதிகமாக உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடுகள்தோறும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.