தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சனாதனம் வேண்டாம் இந்து அறநிலையத்துறை மட்டும் வேண்டுமா? - உதயநிதிக்கு தமிழிசை கேள்வி! - Sanatan issue in Tamil

tamilisai soundararajan vs udhayanidhi stalin :'சனாதனம்' என்பது அழிக்க முடியதாது; அது வாழ்வியல் முறை என்றும், 'சனாதன தர்மத்தை அழிப்போம்' என்பதற்கு முன்பு இந்து அறநிலையத்துறையை வேண்டாமென மு.க.ஸ்டாலினிடம் கூறவேண்டும் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 8:47 PM IST

சென்னை: வடபழனியில் உள்ள காமராஜர் மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக 'ஸ்டெம் செல் சிகிச்சை' மருத்துவமனையை தெலங்கானா ஆளுநரும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தன் கணவருடன் இன்று (செப்.4) இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "எல்லா மக்களும் கல்வியை பயின்றாக வேண்டுமென்ற ஒரு அடிப்படை ஏற்படுத்தி கொடுத்தவர், 'பெருந்தலைவர் காமராஜர்' மட்டுமே என்றார். அந்த வழியில் தற்போது மருத்துவ கல்வியில் முன்னேறி வருவதாகவும் ஆனால், நீட்டை எதிர்த்து வருவதாகவும் கூறினார்.

சனாதனத்தை ஒழிப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், "எதையுமே அழித்து ஒழித்துவிட முடியாது. சனாதனத்தைப் பற்றி பலபேர் சொல்லி இருந்தபோதும் தற்போது தம்பி உதயநிதி ஸ்டாலின் மிகவும் பதற்றத்தில் இருப்பதாக கூறினார். அமெரிக்கா, கனடா நாடுகளில் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியிருப்பதாக கூறிய அவர், உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய இந்த சனாதனம், நோயை பரப்பவில்லை; தர்மத்தை பரப்பி வருவதாக தெரிவித்தார். தர்மத்தை பரப்பி வரும் இந்த சனாதனத்தை எப்படி ஒழிக்க முடியும் என தெரியவில்லை என்றும் 'சனாதனம்' என்பதன் அர்த்தம் என்ன என்றால் ’அழிக்க முடியாது’ எனவும், இது வாழ்வியல் முறை' எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுவதாகவும், துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருவதாகவும் கூறினார். குருவாயூர் சென்று அங்குள்ள சுவாமிக்கு என்ன கொடுத்தார்? என்பதை நான் பார்த்தேன் என்றும் நிச்சயம் அவர்களின் குடும்பத்தை நான் பாராட்டுகிறேன் என்றும் என்ன காரணம் என்றால் தர்மத்தை நல்ல முறையில் பின்பற்றுபவர்களுடைய காரணத்தினால்தான் இவர்கள் எல்லாம் நல்லமுறையில் வாழ்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், 'உதயநிதி தற்போது பதட்டத்தில் உள்ளார். அவர் அந்த பதட்டத்தை தனித்துவிட்டால் நன்றாக இருக்கும் என கூறினார். காங்கிரஸ் 'முக்த் பாரத்' என்கிற ஒரு சொல்லுக்கு விளக்கம் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், ''முக்' என்பது காங்கிரஸ் இல்லாத எனவும்; சனாதன தர்மத்தை அழித்து, ஒழித்து விட முடியாது' எனவும் விளக்கினார். சர்க்காரியா கணக்குகள் எல்லாம் எடுத்துக்கொண்டால் பூச்சி மருந்து விவகாரத்தில் நாம் எவ்வளவு விளையாடி இருக்கிறோம் என்பது தெரியும். நீங்கள் இதுபோன்று சொல்ல சொல்ல 'சனாதன தர்மம்' கொள்கையானது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட சதவீத மக்கள் இதை பின்பற்றி வருகிறார்கள். அவர்களை புண்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் சில பேரை புண்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் பலபேரை புண்படுத்திக்கொண்டு இருக்கிறார். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்வதற்கு முன்பாக, உன் தந்தையிடம் சென்று முதல் வேலையாக இந்து அறநிலையத்தை என்ற ஒரு துறையை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும். கோயில் வேண்டாம்; சாமி வேண்டாம் என்று சொல்லும், நீங்கள் உண்டியல் மட்டும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். முதலமைச்சர் எல்லா மதத்திற்கும் ஒன்றானவர் எனச் சொல்லும் அவரிடம் ஒன்றை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்துவாக இருக்கும் எனக்கு 'தீபாவளி வாழ்த்து, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து' ஏன் கூற மாட்டீர்கள்? இதை சொல்லாத காரணத்தைத்தான் பாகுபாட்டை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். அதனால்தான், இதை பதற்றத்தோடு நீங்கள் இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். 'சனாதன தர்மம்' எதிராக இருக்கிறது என்று சொல்லும் இவர்கள், தற்போது ஏன் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்குள் இதுவரை சாதி புகாமல் இருந்தது. தற்போது அது புகுந்து இருக்கிறது. இதுபோல், பல விவகாரங்கள் உங்களுக்கு சரியாக புரிவதில்லை, ஏனென்றால் நீங்கள் எதையும் சரியாக படிப்பதில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சனாதன தர்மம் விவகாரம்: இந்து எதிர்ப்புதான் தேர்தலுக்கான யுக்தியா? - ஜெ.பி.நட்டா கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details