தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ராஜ்பவனுக்கு சென்று ஆன்லைன் மசோதா குறித்து கேளுங்கள்” - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் - Ambattur

மருத்தவரானால் ஒரு சிலருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அதனால் தான் அரசியலுக்கு வந்ததால் பலருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது என்றும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

”ராஜ்பவனுக்கு சென்று ஆன்லைன் மசோதா குறித்து கேளுங்கள்” - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!
”ராஜ்பவனுக்கு சென்று ஆன்லைன் மசோதா குறித்து கேளுங்கள்” - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

By

Published : Mar 15, 2023, 9:12 PM IST

சென்னை: அம்பத்தூர் கருக்கு பகுதியில் இயங்கி வரும் தனியார் கலைக் கல்லூரியின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா, அந்த கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 15) கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் தனியார் கலைக் கல்லூரி தாளாளரின் தாயார் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “நம்மைப் பெற்று வளர்த்த அன்னைக்கு ஒரு நிறுவனத்தை நிறுவி, அவர்களுக்கான சிலையை திறக்கும் வாய்ப்பு ஒருவருக்கு மட்டும்தான் கிடைக்கும். இன்றைய கால இளைஞர்கள், வாழ்கையில் அனைத்து காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டால் வெற்றியடைய முடியும். படித்து மருத்தவரானால் ஒரு சிலருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அரசியலுக்கு வந்ததால், என்னால் பலருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது.

ஒரு பணியைத் தேர்வு செய்து, அதில் சிறப்பாகச் செயலாற்றி, பொது சேவையில் ஈடுபட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும். வாழ்க்கையில் ஒரு வெறியும் பொறியும் இருக்க வேண்டும். எந்தப் பணியையும் சவாலாக எடுத்து, அதில் வெற்றி காண வேண்டும். இன்றைக்கு உள்ள இளைஞர்கள் அரசியலில் ஈடுபாடற்று இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் அரசியலில், படித்த இளைஞர்கள் வந்ததால்தான் நேர்மையான, தூய்மையான அரசியல் உருவாகும். என்னைப் போன்றோர்களைப் பண்படுத்தி உயர்த்திய ஆசிரியர்களுக்கு நன்றி.

என்னுள் இருந்த ஆளுமை மிக்க தலைவியை கண்டுபிடித்து வெளிக் கொண்டு வந்ததுபோல, மாணவ - மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையைக் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அனைத்து இடங்களிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதை அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசு வேலையை மட்டுமே எதிர்பார்க்காமல், சுயமாக பணியாற்ற முயற்சிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் மற்றும் கரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

கரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் காய்ச்சல் தொற்றால் சிகிச்சை பெற வருபவர்களை கண்காணிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ராஜ்பவனில் சென்று கேளுங்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:1 - 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டம்?

ABOUT THE AUTHOR

...view details