தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த ஆளுநர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி கிராமோத்யோக் பவனில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கிவைத்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

By

Published : Oct 2, 2021, 5:08 PM IST

சென்னை:அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் காந்தியடிகளின் பிறந்தநாள், தீபாவளி சிறப்பு விற்பனையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கிவைத்தார்.

மேலும், இந்த நிகழ்வில் இரண்டு பயனாளிகளுக்குப் பொருள்களை வழங்கி திட்டத்தை ஆளுநர் தொடங்கிவைத்தார். பின்னர், விற்பனைக் கண்காட்சியைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி

முன்னதாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

இதில் காந்தியின் வாழ்க்கைக் குறிப்புகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் பற்றிய குறிப்புகள், விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தொடர்புடைய புத்தகங்களை வெளியிட்டார்.

இதையும் படிங்க : 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details