தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேரு பிறந்த நாள்: ஆளுநர் ஆர்.என். ரவி மலர்த்தூவி மரியாதை - tn governor

ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆர் என் ரவி  நேரு பிறந்தநாள்  நேரு உருவப்படத்திற்கு மரியாதை  குழந்தைகள் தினம்  jawaharlal nehru  jawaharlal nehru birthday  Governor of Tamil Nadu  tn governor  Governor of Tamil Nadu pay tribute to jawaharlal nehru portrait
தமிழ்நாடு ஆளுநர்

By

Published : Nov 14, 2021, 11:23 AM IST

சென்னை:இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை கிண்டி கத்திபாராவில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலைக்கு மரியாதை

மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துத் துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:நவம்பர் 14: குழந்தைகள் தின வாழ்த்துகள்

ABOUT THE AUTHOR

...view details