தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் தயார் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்!
முதலமைச்சரின் தயார் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்!

By

Published : Oct 13, 2020, 10:27 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைகிறேன்.

தனது நிபந்தனையற்ற அன்பு, தியாகங்களால் பிறப்பிலிருந்து சரியான முறையில் வளர்க்கப்பட்ட தாயின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். துயரமான இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அவருடைய ஆத்மாவை அமைதியுடன் என்றென்றும் ஓய்வெடுக்கவும், இந்த அளவிட முடியாத இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க பிரார்த்தனை செய்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details