அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்த நாள் விழா இன்று (அக். 2) கொண்டாடப்படுவதை ஒட்டி, அவரை நாட்டின் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (அக். 2) சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து காந்தியின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், 'அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர்த் தூவி மரியாதை! அதே போன்று, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சமூக வலைத்தளத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அதில், 'அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான இந்நன்னாளில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின் தியாகங்களையும் நாட்டுப் பற்றையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனனவரையும் வழிநடத்துவோம்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி