சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி
- சம்பளம் வழங்குதல் திருத்த மசோதா
- கூட்டுறவு சங்கங்களின் 4 ஆவது திருத்த மசோதா
- கூட்டுறவு சங்கங்களின் 3 ஆவது திருத்த மசோதா
- உள்கட்டமைப்பு மேம்பாட்டு திருத்த மசோதா
- தடுப்புச் சட்டத்தில் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 15 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.