விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு ஆகிய ஐந்து புதிய வருவாய் மாவட்டங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயமானது.
இந்த மாவட்டங்களுக்கு புதிய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், புதிய ஐந்து மாவட்டங்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்களின் பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.