தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பள்ளியில் கழிப்பறையைப் பராமரிக்க நிதி போதுமானதாக இல்லை:ஆசிரியர்கள் குமறல் - அரசு பள்ளி

அரசுப்பள்ளியில் கழிப்பறையைப் பராமரிக்க நிதி போதுமானதாக இல்லை எனப் பள்ளி ஆசிரியர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 2, 2022, 7:17 PM IST

சென்னை:அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகளை சுத்தமாக பாராமரிக்கவும், பழுது பார்க்கவும் ஆண்டிற்கு ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியைக்கொண்டு கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பள்ளி வகுப்பறை, வளாகத்தூய்மை, தூய்மையான குடிநீர் வழங்குதல், திறன் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வித்திட்டத்தில் ஆண்டு பள்ளி பாராமரிப்பு நிதியை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதில், “சுகாதாரத்திட்டங்களுக்கு 10 விழுக்காடு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் 10 விழுக்காடு முழு சுகாதாரத்திட்டத்தில் பள்ளி வகுப்பறை, வளாகத்தூய்மை, சுகாதாரமாகப் பராமரித்தல், கை கழுவும் வசதி ஏற்படுத்த செலவிடப்பட வேண்டும். பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய், 100 மாணவர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய், 250 மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், 1000 மாணவர்களுக்கு 7 ஆயிரத்து 500ரூபாய், 1000 மாணவர்களுக்கு மேல் 10ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை

மாணவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்தல், சுத்தம் செய்யத்தேவையான பொருட்களை வாங்குதல், தினமும் கிருமி நாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்வதை உறுதிச்செய்தல், கழிவறைகளில் கழிவு நீர் தொட்டி பழுது பார்த்தல் மற்றும் சுத்தம் செய்தல் தண்ணீர் வசதிக்கான குழாய்கள் பழுது பார்த்தல் பணிகளை மேற்காெள்ள வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பதுடன், ஒரு ஆசிரியர் தலைமையிலான குழுவும் தினமும் பார்வையிட்டு, குறைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். கிராமப்பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளிகளில் பள்ளித்தூய்மைப் பணியாளர் ஊதியம் மற்றும் தூய்மைப் பொருட்களுக்கான தொகை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அதற்கான செலவினத்தை மானியத்தில் இருந்து எடுக்க கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை கூறும்போது, “பள்ளிக் கல்வித்துறையில் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு அளிக்கப்படும் நிதி போதுமானதாக இருக்கவில்லை. பள்ளிகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு நிதியில் 10 விழுக்காடு கழிப்பறை தூய்மைப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த நிதியில் ஒரு மாதத்திற்குக்கூட செலவிட முடியாது. போதுமான நிதியை அளிக்காமல், ஆசிரியர்களை மேற்பார்வை செய்ய கூறுவதால் எந்தவிதமான பயனும் ஏற்படாது” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டடங்கள்; திறந்துவைத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details