தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!
10:08 August 20
புளியந்தோப்பு கே.பி பார்க் குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்டடத்தைக் கட்டிய குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து குடிசை மாற்று வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரும்பாக்கம் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசித்த மக்களுக்கு புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கட்டடங்கள் தரமற்ற முறையில் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நேற்று (ஆக.19) சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், ”கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கே.பி பார்க் குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருப்பதால் ஒப்பந்ததாரர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிலையில், கட்டடத்தைக் கட்டிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.