சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அதிமுக ஆட்சியின்போதும் பல துறைகளில் நியமிக்கப்பட்ட முக்கிய அலுவலர்கள், பணிமாற்றம் செய்யப்படாமல் அதே பதவியிலேயே நீடித்தனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த பல முக்கிய அலுவலர்களை பணிமாற்றம் செய்து, பள்ளிக் கல்வித் றைச் செயலர் காகர்லா உஷா இன்று (செப்.23) உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரமான கல்வி வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அலுவலர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பணிமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்களின் பெயர், வகிக்க இருக்கும் பணிகளைக் கீழே காண்போம்.
அலுவலர்களின் பெயர், பணி பின்வருமாறு:
- க.அறிவொளி - தொடக்கக் கல்வித்துறை இயக்குனர்
- சேதுராம வர்மா - அரசுத் தேர்வுகள் இயக்குனர்
- குப்புசாமி - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர்
- ராமேஸ்வர முருகன் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில கூடுதல் திட்ட இயக்குனர் நிலை 1
- நாகராஜ முருகன் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில கூடுதல் திட்ட இயக்குனர் நிலை 2
- பழனிசாமி - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர்
- உஷாராணி - ஆசிரியர் தேர்வு வாரியம் உறுப்பினர் (பள்ளிக்கல்வி)
- கண்ணப்பன் - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகச் செயலர்
இவ்வாறு மேற்கண்ட அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பள்ளிகள் திறப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்