தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகப்பேறு விடுப்பு கொடுப்பதில் பாரபட்சம் இல்லை - தமிழ்நாடு அரசு - சென்னை மாவட்ட செய்திகள்

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு கொடுப்பதில் பாரபட்சம் இல்லை
மகப்பேறு விடுப்பு கொடுப்பதில் பாரபட்சம் இல்லை

By

Published : Sep 16, 2021, 3:35 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாள்களில் இருந்து 270 நாள்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த அரசாணையை அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத தற்காலிக பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அத்தகைய தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சம் ஏதும் காட்டுவதில்லை. மகப்பேறு விடுப்பை 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக அதிகரித்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பிஇ, பிடெக் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details