தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் - Chennai cancels the hike

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஜுலை 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்
அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

By

Published : Apr 27, 2020, 8:54 PM IST

தமிழ்நாடு அரசு ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம், இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில், அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அண்மையில் மத்திய அரசு கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்த 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தது. அத்துடன் 2020 ஜனவரி மாதம், 2020 ஜுலை மாதம், 2021 ஜனவரி மாதம், 2021 ஜுலை மாதம் ஆகியவற்றுக்கான அகவிலைப்படி உயர்வையும் ரத்து செய்தது.

அதேபோல் தமிழ்நாடு அரசும் ஜனவரி மாதத்திற்காக உயர்த்தி அறிவித்த அகவிலைப்படி உயர்வையும் ரத்து செய்துள்ளது. அத்துடன் ஜுலை 2021 வரை, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் - தமிழக அரசு அரசாணை

ABOUT THE AUTHOR

...view details