தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பணியில் பின் வாசல் வழியாக வந்தவர்களை எந்த சூழலிலும் நிரந்தரமாக்க கூடாது - உயர் நீதிமன்றம் - Government appointees

பின் வாசல் வழியாக அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 7, 2022, 9:02 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பும் வகையில் 2007ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில் நீண்டகாலமாகப் பகுதி நேர தொழில்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி, பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம், மனுதாரர்கள் அனைவரும் தகுதியான கல்வித்துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் முறையான தேர்வு நடைமுறையைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நீண்ட காலம் பணியாற்றியதற்காக பணி நிரந்தரம் கோர முடியாது என்றும், முறையாக நியமிக்கப்படாதவர்களுக்கு பணி நியமன சலுகை வழங்கினால், தகுதியுடன் அரசு வேலைக்காகக் காத்திருப்போரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து நியமனங்களும் தேர்வு விதிகளை பின்பற்றியே நடத்தப்பட வேண்டும் என்றும், பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும் வரன்முறைப்படுத்தக் கூடாது என தெரிவித்த அவர், வந்த வாசல் வழியாகவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.

அதேநேரம், மனுதாரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த தடையும் இல்லை என கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு: 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

ABOUT THE AUTHOR

...view details