தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க குழு அமைத்தது அரசு - tamilnadu goverment

கூட்டுறவு வங்கிகளில் நகை முறைகேடு மட்டுமின்றி, பொதுக்கடன் முறைகேடுகளை ஆய்வு செய்யவும் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகைகடன் முறைகேடு
நகைகடன் முறைகேடு

By

Published : Sep 26, 2021, 7:27 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் 5 சவரன் நகைக் கடன் பெற்றவர்களின் விவரங்களைப் பெற்று, கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

அதே சமயம் இவ்விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கும் குழு அமைத்துள்ளது. இந்த நிலையில் 100% பொதுக்கடன்களை ஆய்வு செய்யவும் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி ஆய்வுக்குழுவில் இருப்பவர்கள் யார்?

கூட்டுறவு வங்கி ஆய்வுக்குழுவில் கூட்டுறவு சார்பதிவாளர், மத்தியக் கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், களமேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 100% நகைக்கடன் ஆய்வுப்பணியின்போது வழங்கிய நெறிமுறைகளைப் பின்பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், மண்டல கூடுதல் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடியிலும் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details