தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11ஆம் வகுப்பில் இடை நின்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் - தேர்வுத்துறை புதிய அறிவிப்பு!

சென்னை : 11-ஆம் வகுப்பு படித்து இடையில் நின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் குறித்த விபரத்தினை அரசு தேர்வுத் துறைக்கு தனியாக அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/06-September-2019/4359783_60_4359783_1567781596192.png

By

Published : Sep 6, 2019, 11:42 PM IST

அரசு தேர்வுத்துறையின் கடிதத்தில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின், உடல் நலமின்மை போன்ற காரணங்களால் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல், பள்ளியில் இடையில் நின்ற மாணவர்கள், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வில் 12ஆம் வகுப்பு மாணவராக சேர்ந்து பொதுத்தேர்வு எழுத தடையில்லை என அறிவித்துள்ளது.

மேலும்,வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல், 11ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு பெயர் பட்டியலிலிருந்து தயாரிக்கப்பட உள்ளது. ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவிட்டு பின்னர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர் என்ற பெயரை, தற்போது அவர் படிக்கும் பள்ளியின் பெயர் பட்டியலில் சேர்த்து விடலாம்.

ஆனால், அந்த மாணவர் பதினோராம் வகுப்பில் தேர்வு எழுதிய குரூப், பயிற்று மொழி, மொழிப்பாடம் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. 2019ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளியில் சேர்ந்து படித்தாலும், அவர்களின் பெயர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெயர்களுடன் சேர்க்க முடியாது என அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details