தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மதிய உணவுத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.
அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கறுப்பு கொண்டைக் கடலை , தக்காளி சாதம், கருவேப்பிலை சாதம், கீரைச் சாதம் எனப் பல வகையான சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சமூக நல ஆணையர் ஆபிரகாம் அனைத்து மாவட்ட சத்துணவுத் திட்ட நேர்முக அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’அரசு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு 30 ஆண்டுகளாக ஒரே சீராக வழங்கப்பட்டு வந்த உணவில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கலவை உணவு எது? வேறு எந்த உணவு மதிய உணவாக வழங்கப்பட்டால் அவர்கள் உட்கொள்வார்கள் என அவர்களது விருப்பத்தினை பெற்று அறிக்கையாக அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
சமூக நல ஆணையர் அபிரகாம் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் இதையும் படிங்க: திருத்தணியில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி.!!