சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் அமீது(34), ராசிக் அலி(31), பைசூல் ரகுமான் (28), இலங்கையைச் சேர்ந்த ஃபாத்திமா(48), பரீனா ரிஸ்வி(43), யாசிர் (41), சென்னையைச் சேர்ந்த நசீர் அகமது(28) ஆகியோர் உடைமைகளில் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது.
இலங்கை, துபாயிலிருந்து கடத்திவந்த ரூ.1.24 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை: இலங்கை, துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
chennai-airport
அதேபோல், துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூருல் ஹக்(38) என்பவரும் தங்கம் கடத்திவந்தது கண்டறியப்பட்டது. சோதனை முடிவில் எட்டு பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 910 கிராம் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ. 86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!